காடழித்தலின் தீமைகள் மற்றும் காடு வளர்ப்பின் நன்மைகள்
மனித வாழ்க்கையில் மரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன அது நமக்கு உண்ண உணவு , சுவாசிக்க நல்ல காற்று, நோயின்றி வாழ மூலிகைகள் , இருப்பிடம் மற்றும் பல நன்மைகளை தருகின்றது. ஆனால் நாம் அதன் அருமையை உணராமல் வெட்டி விழ்த்துகிறோம. இத்தகைய செயல்களின் மூலம் நம்மை அறியாமல் காடுகளின் வளங்களை அழித்துக் கொண்டு வருகிறோம். இதனைத்தான் ஆங்கிலத்தில் Deforestration என்கின்றனர்.
- அதிக நிலப்பரப்பு உள்ள விவசாய நிலங்களை அமைக்க.
- சமையல் எரிபொருளுக்காக.
- வீடு கட்டுவதற்காக.
- வணிகம் செய்வதற்காக.
- காகித உற்பத்திக்காக.
- கலை மற்றும் கைவினை பொருட்களுக்காக.
- நில சுரங்கம் அமைப்பதற்காக
காடுகளை அழிபதனால் ஏற்படும் விளைவுகள் :
1. மண்ணரிப்பு:
- சூரிய கதிர்கள் நேரடியாக மண் மீது விழுவதனால் அதனுடைய ஈரப்பதம் குறைந்து, அதன் சத்துக்கள் வெளியேறி, நுண்ணுயிர்கள் அழிந்து மண்ணின் மக்கும் தன்மை குறைந்துவிடுகின்றது.
- இதனால் மழை பொழியும் பொழுது மண்ணரிப்பு உண்டாகி நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.
2. இனங்களின் இழப்பு :
உலக அளவில் 70 சதவிகித தாவரங்கள் மற்றும் விலங்குகள் காடுகளில் வாழ்கின்றன. காடுகள் அழிக்கப்படுவதினால் அவற்றின் உரைவிடங்களும் அழிக்கப்படுகின்றன. ஆகையால் அவைகளின் இனமே அழியக்கூடிய நிலைமை உருவாகின்றது.
3. கார்பன் வெளிப்படுத்துதல்:
தாவரங்கள் கரிவளி வாயுவை உட்கொண்டு தனக்கு தேவையான உணவை தயார் செய்து நாம் உயிர் வாழத் தேவையான பிராணவயுவை வெளியேற்றுகின்றன.காடுகளை அழிப்பதனால் பிராணவாயுவின் அளவு காற்றில் குறைகின்றது.
4. நீரியல் சுழற்சி :
நீரியல் சுழற்சி ஏற்பட மரங்கள் பெரிதும் உதவுகின்றன. நிலத்தில் இருக்கும் நீரை தனது வேர்களால் உரிந்து காற்றில் வெளிவிடுகின்றன (evaporation ). இத்தகைய செய்முறையால் மழைப்பொழிவு உண்டாகின்றது.
"விசும்பின்
துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல்
தலைகாண்பு அரிது"
-திருவள்ளுவர்
பொருள் :
விண்ணிலிருந்து
மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.
எனவே
மரம் வளரப்போம்
மழை பெருவோம்
மனித உயிரைக் காப்போம்.
காடுகள் அழிவதைத் தடுக்கும் வழிகள்:
1. மரக்கன்றுகளை நடுதல்:
மரக்கன்றுகளை நடுவதினால் காற்றிலுள்ள கார்பனின் அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது .
2. மறுசுழற்சிப் பொருட்களை வாங்குதல்:
மறுசுழற்சிப் பொருட்களை உபயோகிப்பதினால் மூலப்பொருட்களின் தேவையைக் குறைக்கலாம்.
மறுசுழற்சிப் பொருட்களில் சில
உலோகம்
பிளாஸ்டிக்
காகிதம்
கண்ணாடி
3. விழிப்புணர்வு:
மக்களிடையே காடுகளின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவத்தின் மூலம், காடுகள் அழிவதைத் தடுத்து சுற்றுச்சுழலை மேம்படுத்தலாம்
This comment has been removed by the author.
ReplyDeleteநல்லது
ReplyDeleteமகிழ்ச்சி
ReplyDeleteநன்று
ReplyDeleteXrgg
ReplyDeleteAwesome thanks
ReplyDeleteVery useful
ReplyDeleteநல்ல கருத்துகள்
ReplyDeleteஇதுதா இப்ப உள்ள உலகத்துக்கு தேவை
ReplyDeleteசிறந்த பதிவு.😀😀
ReplyDelete👍👌
ReplyDeleteTq for this 🙏🏻😁👆🏻
ReplyDeleteGood information about forest in Tamil 🙌👏🙏🤝
ReplyDeletevery helpful
ReplyDeleteGreat paragraph. Very helpful and useful
ReplyDeleteSuper😄🎉
ReplyDelete