Wednesday, March 26, 2014

உயர்ந்த வறியவன்

    பேரரசர் அக்பர் பீர்பாலிடம் ஒரு மனிதன் வறுமையிலும் உயர்வாக வாழ இயலுமா? என்று கேட்டார்.முடியும் அரசே என்று பதில் அளித்தார் பீர்பால்.
     அப்படிப்பட்ட மனிதரை நான் காண வேண்டும் உடனே அரசவைக்கு அழைத்து  வாருங்கள் என்று மன்னர் கூறினார்.
      உடனே பீர்பால்  வெளியில் சென்று ஒரு பிச்சைக்காரனுடன் திரும்பி வந்தார்.
     அவரை அரசர் முன்  நிறுத்தி இவர்தான் நீங்கள் வகுத்த வரம்புக்குள்  வருகிறவர். அதற்கு மன்னர், நீங்கள் கூறுவது உண்மையாக இருக்கலாம் ஆனால் இவர் எந்த விதத்தில் உயர்ந்தவர் என்பது எனக்குத் தெரியவில்லை.
    அதற்கு பீர்பால்; சான்றோர்கள்  மற்றும் குடிமக்கள்  நிறைந்த இந்த அரசவையின்  கவனத்தையும் மாமன்னரான தங்களின் கவனத்தையும் ஈர்த்ததினால் பிச்சைக்கரர்களுள் இவர் உயர்தவர் என்றார்.



No comments:

Post a Comment