ஒரு ஊரில் ஒரு ஏழை விவசாயி வெண்ணையை ரொட்டி கடைகளில் விற்கும் வியாபாரத்தை செய்து வந்தான். ரொட்டிக்கடைகரன் அதனை எடை போடாமல் பெற்றுகொள்வான். ஒரு நாள் ரொட்டி கடைக்காரன் விவசாயி கொடுத்த வெண்ணையை எடை போட்டு பரர்க்க நினைத்தான். எடை போட்டு பார்க்கும் பொது எடை குறைவாக இருந்தது, கோவம் கொண்ட ரொட்டி கடைக்காரன் விவசாயியின் மீது வழக்கு தொடர்ந்தான். விவசாயி நீதிபதியின் முன்பு நிறுத்தப்பட்டான், நீதிபதி விவசாயியிடம் எடை குறைந்ததற்கான காரணத்தைக் கேட்டார் அதற்கு அவன் நான் எந்த தவறும் செய்யவில்லை எனவும்; தன்னிடம் எந்த அளவுகோலும் இல்லை எனவும் கூறினான். ஆனால் நான் வெண்ணையை ரொட்டி கடைக்காரனிடம் விற்பதற்கு முன் அவனிடம் 1கிலோ ரொட்டி வாங்குவேன்; அதை அளவுகோலாகக் கொண்டு அதே அளவுள்ள வெண்ணையை அவரிடம் விற்றேன் என்றான்.
இக்கதையின் மூலம் நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால்
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.
- திருவள்ளுவர்
பொருள்:
நாம் பிறருக்கு செய்யும் நல்வினை, தீவினை எதுவாகினும் அது நமக்கே வந்து சேரும்.
No comments:
Post a Comment