Monday, March 17, 2014

ஒரே ஒரு கேள்வி

     முகலாய அரசர்களுள் மிகவும் நேசிக்கப்படுபவர் அக்பர்,அவர்  1556 முதல் 1605 வரை நம் நாட்டை ஆண்டவர்.தனக்கு கல்வி தகுதி இல்லாத காரணத்தால் தன் அரசவையில் படித்தவர்களுக்கே பதவியளித்தார்.அவர்களுள் ஒருவர் தான்  பீர்பால் என்ற அமைச்சர்.
   ஒரு நாள் அக்பரின் அரசவைக்குப்  பண்டிதர் ஒருவர் வந்தார்,அவர் தான்  கேட்கும் கேள்விக்குப்  பீர்பால் விடை கூறிவிட்டால் மக்கள் அனைவரும் கூறுவது போல் அவர் திறமைச்சாளி என்று ஏற்றுக்கொள்கிறேன் என சவால் விடுத்தார்.
  அவர் பீர்பாலிடம் 100 எளிமையான கேள்வி வேண்டுமா? அல்லது ஒரு கடினமான கேள்வி வேண்டுமா? என வினவினார்.
  அன்று மன்னருக்கும் பீர்பாலுக்கும் நாள் நன்றாகயில்லை அவர்கள் அவசரமாக அங்கிருந்து செல்ல வேண்டிய நிலைமை.அதனால்  பீர்பால் ஒரு கடினமான கேள்வி கேட்குமாறு கூறினார்.

      சரி இதோ என் கேள்வி

                  இந்த உலகத்திற்கு கோழி முதலில் வந்ததா இல்லை முட்டை முதலில் வந்ததா?

    கோழி என்று  பீர்பால் பதில் கூறினார்.அதற்கு பண்டிதர் அது எப்படி உமக்கு தெரியும் என்றார்.ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கவே ஒப்புக் கொண்டேன் முதல் கேள்விக்குப் பதில் கூறிவிட்டேன் என்றார்.உடனே மன்னரும் பீர்பாலும் அங்கிருந்து  சென்றுவிட்டனர். பண்டிதர் வாய்பிளந்து நின்றார்.
    

No comments:

Post a Comment